Sunday, October 15, 2017


பார் கவுன்சிலில் இரு முறை பதிவு வழக்கறிஞர் தொழில் புரிய தடை

சென்னை, இரண்டு முறை, பார் கவுன்சிலில் பதிவு செய்தவர், வழக்கறிஞராக தொழில் புரிய, தமிழ்நாடு பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்களில், முகவரி இடம் பெறாத, ௪௨ வழக்கறிஞர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
பார் கவுன்சில் இணைய தளத்திலும், அந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டது; வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, கும்ப கோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், திவான் மைதீன் என்பவர், மாணிக்கம் என்பவரது பதிவு எண் பற்றி, பார் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பினார். அதைதொடர்ந்து, மாணிக்கம் தொடர்பான ஆவணங்களை, பார் கவுன்சில் சரிபார்த்தது.
பின், வழக்கறிஞர், டி.ஜி.மாணிக்கத்துக்கு, பார் கவுன்சில் அனுப்பிய உத்தரவு:
கல்வி தகுதி மற்றும் சரியான முகவரி இல்லாமல், ௧௯௯௮ல், பார் கவுன்சிலில், நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்.
வழக்கறிஞர், திவான் மைதீன் என்பவர் அளித்த பதிவு எண்ணை பார்க்கும் போது, ௨௦௧௪ல், தேவையான ஆவணங்களை அளித்து, பார் கவுன்சிலில், மீண்டும் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.
ஏற்கனவே, ௧௯௯௮ல் பதிவு செய்ததை மறைத்துள்ளீர்கள். அதனால், ௧௯௯௮ல் இருந்து, ௨௦௧௪ வரை, வழக்கறிஞராக நீங்கள் தொழில் செய்தது, சட்ட விரோதமானது. 
இரண்டு முறை, பார் கவுன்சிலில் பதிவு செய்து மோசடி செய்துள்ளீர்கள். வழக்கறிஞராக, தொழில் புரிய, உங்களுக்கு தகுதியில்லை. உங்கள் மீது, தகுந்த கிரிமினல் நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சிலுக்கு உரிமை உள்ளது.
வழக்கறிஞராக பதிவு செய்ததை, ஏன் ரத்து செய்யக் கூடாது என்பதற்கு, நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்க தவறினால், பார் கவுன்சில் அமைத்துள்ள சிறப்பு குழு, இந்த பிரச்னையை சட்டப்படி பைசல் செய்யும். அது வரை, வழக்கறிஞராக தொழில் புரிய, உங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...