Friday, October 20, 2017

பயணி புகார்: ஆம்னி பஸ் பறிமுதல்


நாகர்கோவில்: தீபாவளியை ஒட்டி, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. 
ஆனால், பல பஸ்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து நாகர்கோவிலிலுக்கு புறப்பட்ட பஸ்சில், 1,000 ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக, 2,850 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இதுபற்றி பயணியர் அலைபேசியில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து, சென்னை போக்குவரத்து அதிகாரிகள் பஸ் கிளம்பும் இடத்திற்கு செல்லும் முன், பஸ் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டு விட்டது. இதுபற்றி அவர்கள் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.
நேற்று காலை இந்த பஸ் நாகர்கோவில் வந்ததும், அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், பஸ்சில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024