சென்னையில் புகை மூட்டம் : விமான சேவைகள் பாதிப்பு
பதிவு செய்த நாள்
20அக்2017
02:50
சென்னை: இரவில் புகை மூட்டம் நிலவியதால், சென்னைக்கு வந்து செல்லும், 23 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததால், சென்னை நகர் முழுவதும், நேற்று முன்தினம் இரவு, புகை மண்டலம் சூழ்ந்தது. அதனால், சென்னை விமான நிலையத்தில், இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 2:00 மணி வரை, விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஐதரபாத்திலிருந்து, இரவு, 10:30 மணிக்கு, சென்னை வந்த விமானம், பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
சிங்கப்பூர், கோலாலம்பூர், தோகா, பாங்காக், ஹாங்காங், டில்லி, மும்பை, மதுரை, ஹைதராபாத், பூனே, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து, சென்னை வந்து செல்லும், 23 விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெங்களூரு திருப்பிவிடப்பட்ட விமானம், நள்ளிரவு, 2:00 மணிக்கு மேல், சென்னையில் தரை இறங்கியது.

No comments:
Post a Comment