Tuesday, October 10, 2017

கம்ப்யூட்டரில் இனி இதயமே ‘பாஸ்வேர்டு’

2017-10-09@ 00:23:54




நியூயார்க்: கம்ப்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் என்று அனைத்துக்கும் இதயத்தை ஸ்கேன் செய்து அதன் மூலம் உள்ளே செல்லும் நவீன முறையை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவரின் இதயத்தை மிகச்சிறிய அளவிலான டாப்லர் ராடார் ஸ்கேன் கருவி மூலம் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. சில நொடிகள் இதயத்தின் இயக்கம் கண்காணித்ததும், அதையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழைய முடியும். இப்படி உங்கள் இதயத்தை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால், வேறுயாரும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தவே முடியாது. இது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் ஒவ்வொருவரின் இதயமும் வேறுபட்டு அமைந்துள்ளது. இந்த நவீன முறையை நியூயார்க்கில் உள்ள யு.பி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பயோமெட்ரிக் மற்றும் பிற பாதுகாப்பு முறையைவிட இது மிகவும் சிறந்தது, துல்லியமானது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதயத்தை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் முறை, இப்போதைக்கு கம்ப்யூட்டருக்கு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள், விமான நிலையங்களில் நடத்தப்படும் சோதனைகளில் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“நாங்கள், ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இந்த பாதுகாப்பு முறையை பயன்படுத்த உள்ளோம். ஏனெனில், ஒவ்வொருவரும் தங்களது ரகசியத்தை பாதுகாக்கவே விரும்புகின்றனர்” என்று இந்த பல்கலைக்கழக பேராசிரியர் வான்யோவ் ஜியு தெரிவித்தார். இந்த நவீன முறையில், பயன்படுத்தப்படும் ஸ்கேன் கருவி வெளியிடும் கதிர்வீச்சு அளவு, வைபையில் பயன்படுத்தப்படுவதைவிட மிகவும் குறைவானது. ஆகையால், இதனால் நமது உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இது குறித்து அச்சமடைய தேவையில்லை என்றும் அவர் கூறினார். “நாம், தினமும் வைபை சுற்றுப்புற சூழலில்தான் வாழ்கிறோம். வைபை முறையை போல் இந்த நவீன முறையும் மிகவும் பாதுகாப்பானதுதான். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அளவில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே இதில் வெளிப்படும் என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது’’ என்றார்.
ஒருவரின் இதயத்தை முதல் முறையாக ஸ்கேன் செய்ய சுமார் 8 வினாடிகள் தேவைப்படுகிறது. அதன் பின்னர் தொடர்ந்து இதயத்தை கண்காணித்து கம்ப்யூட்டர் தனது நினைவாற்றலில் பதிவு செய்து கொண்டுவிடும். பிறகு எப்போது வந்து கம்ப்யூட்டர் முன் அமர்ந்தாலும் உடனே ஸ்கேன் செய்து அடையாளத்தை சரிபார்த்து அடுத்த நொடியே நுழைய அனுமதித்து விடும்.

இத்தகைய பாஸ்வேர்டு மூலம் ஒருவர் கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது, அதன் பாதுகாப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் வேறு ஒருவர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அதை இயக்க நினைத்தால் முடியவே முடியாது. மேலும் தனது பாஸ்வேர்டை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. இந்த நவீன முறையை மிகவும் சிறிய அளவிலான கம்ப்யூட்டர் கீபோர்டுகளில் பயன்படுத்தவும் செல்போன்களில் பயன்படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலையங்களில் ஒருவரை சுமார் 30 மீட்டர் அளவு இடைவெளியில் இருந்து அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் இந்த கருவியை பயன்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள்

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...