Tuesday, October 10, 2017

குமரியில் வெங்கடாஜலபதி கோவில் 2018ஜனவரிக்குள் முடிக்க திட்டம்

பதிவு செய்த நாள்10அக்
2017
00:48

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் மூலஸ்தான கோபுர விமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திரா வளாகத்தில், கடற்கரையை ஒட்டி, திருப்பதி வெங்க டாஜலபதி கோவில் கட்டப்பட்டு வருகிறது. 22.50 கோடி ரூபாய் செலவில், ஐந்தரை ஏக்கர் நிலத்தில், இந்த பணி நடக்கிறது.

திருமலை கோவில் போன்று, அதே வடிவில் கட்டப்பட்டு வருகிறது. 2013 ஜூனில் துவங்கிய பணி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. திருமலையில் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில், இங்குள்ள மூலஸ்தானத்தில் சூரிய ஒளி விழும் வகையில், கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது மூலஸ்தான விமான கோபுர பணி நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும், வரும் ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

கடல் காற்றால் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டு வருகிறது. கற்கள் அனைத்தும், திருச்சி மாவட்டம், நாகலாபுரத்தில் இருந்து வந்துள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024