Tuesday, October 10, 2017

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் டிச.29ல் சொர்க்கவாசல் திறப்பு
பதிவு செய்த நாள்10அக்
2017
01:59


திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு, 2017ம் ஆண்டில் இரண்டாவது முறையாக, டிசம்பர், 29ல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடக்கிறது.

பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம், திருப்பதி, சென்னை பார்த்தசாரதி கோவில்கள் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும்.

கடந்த ஆண்டுக்கான சொர்க்கவாசல் திறப்பு, 2017ல் ஜனவரி, 8ல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்தது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, வரும் டிசம்பர், 18ல் திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்குகிறது. அடுத்தநாள் பகல்பத்து நிகழ்ச்சிகள் துவங்கி, 28ம் தேதி மோகினி அலங்காரம் நடக்கிறது. அடுத்த நாள், டிசம்பர் 29, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின், ஜனவரி, 4ல் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கைத்தல சேவையும், 5ல் திருமங்கைமன்னன் வேடுபறியும், 7ல் தீர்த்தவாரியும், 8ல் நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024