Monday, October 16, 2017

மாவட்ட செய்திகள்

சேலத்தில் பலத்த மழை: குமரகிரி ஏரி நிரம்பி 250 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


சேலத்தில் பெய்த பலத்த மழையால் குமரகிரி ஏரி நிரம்பி 250 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

அக்டோபர் 15, 2017, 04:15 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. சேலம் மாநகரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் கழிவுநீருடன், மழைநீர் சாலையில் சென்றது.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் பெய்த தொடர் மழையால் குமரகிரி ஏரி நிரம்பியது. இதனால் ஏரி தண்ணீர் ராஜவாய்க்கால் வழியாக வெளியேறி பச்சப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் முழங்கால் அளவிற்கு நனைந்தவாறு சாலையில் நடந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்தது.

இதைத்தொடந்து அவர்கள் தண்ணீரை பாத்திரம் மூலம் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

சேலத்தில் பலத்த மழையால் வாகனங்கள் ஊர்ந்தவாறு சென்றன. இதையொட்டி சேலம் பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், 4 ரோடு, 5 ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2025