Monday, October 16, 2017

ஏ.டி.எம்.,மில் வந்த காகிதம் : பணமெடுத்தவர் அதிர்ச்சி

பல்லாரி: ஏ.டி.எம்.,மில், 500 ரூபாய்க்கு பதில், வெள்ளை தாள் வந்ததால் பணம் எடுத்தவர் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் செய்தார். பல்லாரி மாவட்டம், டேங்க் பண்ட் ரோட்டில், எஸ்.பி.ஐ.,க்கு சொந்தமான ஏ.டி.எம்., உள்ளது. இந்த ஏ.டி.எம்.,மில், ஆர்.ரமேஷ் என்பவர், நேற்று காலையில், தன் வங்கி கணக்கிலிருந்து, 8,000 ரூபாய் எடுத்துள்ளார். 500 ரூபாய் நோட்டுகள், 15ம்; அதே அளவு கொண்ட ஒரு வெள்ளை தாளும் வந்துள்ளது. இதை பார்த்த ரமேஷ், அதிர்ச்சியடைந்தார். அப்பகுதியில் இருந்த மக்களிடம் தெரிவித்தவுடன், அனைவரும், ஏ.டி.எம்., முன் குவிந்து, வங்கி ஊழியர்கள் வர வேண்டும் என போராட்டம் நடத்தினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதிகாரிகள் யாரும் வரவில்லை. எனவே, காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...