Sunday, October 15, 2017


31 பேருக்கு வாரிசு வேலை


சென்னை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், பணியின் போது இறந்த, 31 பேரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 31 பேருக்கான பணி நியமன ஆணைகளை, சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
அதே போல், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், 10 ஆண்டுகள் பணி முடித்த, 92 சுமை பணியாளர்களுக்கு, பச்சை நிற அடையாள அட்டை, ஓராண்டு பணி முடித்த, 952 சுமை பணியாளர்களுக்கு, இளஞ்சிவப்பு அடையாள அட்டைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் காமராஜ், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலர், குமார் ஜெயந்த் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...