Sunday, October 15, 2017

டிராபிக் போலீஸாக மாறிய கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ்


தமிழக அளவில், ஆங்காங்கே மாவட்ட வாரியாக, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருவதையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு வருவதால் ஆங்காங்கே மற்ற மாவட்டங்களுக்கும், மேலும் ஒரு சில மாவட்டங்களுக்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, தீபாவளி சமயம் என்பதினால், ஆங்காங்கே திருட்டு, டிராபிக் ஆகாமல் போலீஸார் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், கரூர் மாவட்ட கலெக்டர் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டும், மர்ம காய்ச்சலை ஏற்படுத்தும் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு தீவிர பணியை மேற்கொள்ள கரூர் நகராட்சிக்கு உத்திரவிட்டதன் பேரில், கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் திடீரென்று விசிட் அடித்ததோடு, அங்குள்ள பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். 

இந்நிலையில் சனிக்கிழமையென்றால் கரூர் நகரம் கூட்ட நெரிசல் காணப்படும் நிலையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் போலீஸார் யார் துணையும் இல்லாமல் கொசுக்களை ஒழிக்கும் விதம், நிலவேம்பு கசாயம் கொடுப்பதை ஆய்வு மேற்கொண்டு சுமார் 3 மணி நேரம் அப்பகுதி மக்களுடன் மக்களாக இருந்த நிலையில், ஏற்கனவே காமராஜர் மார்க்கெட் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், இவருடைய வருகையால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க கூடாது என்பதற்காக, அதே பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். 

இந்த காட்சி பொதுமக்களிடையேயும், அதிகாரிகளிடையேயும், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, மாவட்ட கலெக்டர் வருகை என்றால் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்களிடையே இந்த கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், எனக்காக மக்களை யாரும் காக்க வைக்க வேண்டாம் என்று கர்ராராக உத்திரவிட்டதோடு, அவரே ஏற்கனவே, அதாவது எப்போதும் டிராபிக் ஆகி விடும் இடத்தை சரி செய்த காட்சி மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...