Tuesday, October 10, 2017

மூச்சு விட சிரமப்பட்ட குழந்தை : 7 மணி நேரம் தாமதமாக வந்த, '108'

பதிவு செய்த நாள்10அக்
2017
00:03




காஞ்சிபுரம்: அரசு மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை, மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு கொண்டு செல்ல, '108' ஆம்புலன்சுக்காக ஏழு மணி நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தோர், சசிகுமார் - வரலட்சுமி தம்பதி. இவர்களின், ஒன்பது மாத குழந்தைக்கு, உடல் நிலை சரியில்லாததால், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

நெஞ்சில் சளி இருந்ததால், மூச்சு விட, குழந்தை மிகவும் சிரமம் ஏற்பட்டது. காய்ச்சலும் அதிகமாக இருந்ததால், திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

அதனால், மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து, நேற்று காலை, 6:00 மணிக்கே, '108' ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வாகனம் வரவில்லை. 

குழந்தையின் போக்கால் அச்சமடைந்த பெற்றோர், தனியார் ஆம்புலன்சில் கொண்டு செல்ல முடிவெடுத்தனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஒப்பு கொள்ளாமல், 'தனியார் ஆம்புலன்சில், அரசு மருத்துவர்கள் செல்ல மாட்டார்கள்' எனக்கூறி விட்டது.

மதியம், 1:15 மணிக்கு வந்த ஆம்புலன்சில், குழந்தைக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தி, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடன், ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இருந்தனர்.
காஞ்சிபுரம் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஒன்று எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 53 ஆம்புலன்சுகள் உள்ளன. அதில் குழந்தைகளுக்கு, செயற்கை சுவாச கருவியுடன் கூடிய இரு வாகனங்கள் மட்டுமே உள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்த வாகனம் ஒன்று பழுதாகி விட்டது. செங்கல்பட்டில் உள்ள வாகனம் மட்டுமே, மாவட்டம் முழுவதும், குழந்தைகள் அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...