Tuesday, October 10, 2017

டில்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியாது
புதுடில்லி: டில்லியில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.



டில்லியில், காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து, 2016 நவ., 11ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த தடையை தற்காலிகமாக நீக்கி, செப்., 12ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பட்டாசுகள் விற்க, வெடிக்க தடை

இந்நிலையில், 'டில்லியில், காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில், பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில்

வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த, நீதிபதி, ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, பிறப்பித்த உத்தரவு:

டில்லியில், தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிக்காவிட்டால்,காற்றின் தரம் எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன்படி, அக்., 31 வரை, டில்லியில் பட்டாசுகள் விற்க, வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. பட்டாசு விற்பனைக்கு அனுமதித்து, செப்., 12ல் அளித்த உத்தரவு, நவ., 1 முதல் அமலுக்கு வரும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பை அடுத்து, இந்தாண்டு தீபாவளியின் போது, டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில், பட்டாசு வெடிக்க முடியாது. டில்லியில், 19ல், தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.

தடையால் சிவகாசிக்கு ரூ.1,000 கோடி இழப்பு

டில்லியில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால், தமிழகத்தின், சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு, 1,000 கோடி

ரூபாய் இழப்பு ஏற்படும் என, கணிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, பட்டாசு விற்பனையாளர்கள் கூறியதாவது:

நாட்டின் மொத்த பட்டாசு தேவையில், 85 சதவீதம், சிவகாசியில் இருந்தே அனுப்பப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. டில்லியில் விதிக்கப்பட்ட தடையால், 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். டில்லியை தொடர்ந்து, வேறு சில மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டால், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...