Friday, October 20, 2017

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : இல.கணேசன் நம்பிக்கை


மதுரை: ''மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்புகள் இருப்பதாக, மத்திய அமைச்சர் நட்டா என்னிடம் தெரிவித்தார். எய்ம்ஸ் அமைய மதுரை ஏற்ற நகரம்,'' என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி., கூறினார்.
அவர் கூறியதாவது:அலோபதி டாக்டர்கள் கூட நிலவேம்பு கஷாயத்தை ஏற்றுக் கொண்டனர். வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்பதற்காக, நிலவேம்பு குறித்து கமல் கருத்து 
தெரிவித்துள்ளார் என நினைக்கிறேன். டெங்குவை ஒழிக்க, உடனடி தேவையாக நிலவேம்பு உள்ளது. மாற்று மருந்து இருந்தால், அதுபற்றி கமல் கூறியிருக்கலாம். டெங்கு மரணங்கள் அதிகரிக்காமல் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். மக்களும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.தஞ்சைக்கும், திருச்சிக்கும் இடையே உள்ள சிங்கப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக கூறினர். தஞ்சை எனது சொந்த மாவட்டமாக இருந்தாலும், சிங்கப்பட்டியை ஏன் தேர்வு செய்தார்கள் என தெரியவில்லை. மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்தபோது, 'தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் அமைவது பொருத்தமாக இருக்கும்' என என்னிடம் கூறினார். எய்ம்ஸ் அமைய ஏற்ற நகரம் மதுரைதான். மத்திய அரசு வரைமுறைப்படி மாநில அரசு பரிந்துரை செய்யும் இடத்தில் எய்ம்ஸ் அமையும்.
தேசிய வழிபாட்டு தலங்களில் மதுரை திருமலை நாயக்கர் மகால், உ.பி.,யில் தாஜ்மகால் உள்ளிட்டவை இடம் பெறவில்லை. தாஜ்மகால் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் நான் பேசியுள்ளேன். தாஜ்மகால் என்றுமே சுற்றுலாத்தலம் தான், 
என்றார்.நிர்வாகிகள் சீனிவாசன், சசிராமன், மகாலட்சுமி, ஹரிஹரன், பாரதிராஜ் 
உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY