Friday, October 13, 2017


தொலைபேசி, 'சரண்டர்' அதிகரிப்பு : தடுக்க பி.எஸ்.என்.எல்., புது உத்தி

தரைவழி தொலைபேசி இணைப்புகளை, திருப்பி தரும் வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்த, புதிய உத்தியை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் கையாள துவங்கி உள்ளது. அதற்கு, நல்ல பலனும் கிடைத்துள்ளது. தமிழகத்தில், தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், பி.எஸ்.என்.எல்., தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. எனினும், மொபைல் போன்கள் பெருக்கத்தால், தரைவழி தொலைபேசிகளை, 'சரண்டர்' செய்வோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க, புதிய உத்தியை, பி.எஸ்.என்.எல்., கையாள துவங்கி உள்ளது. 

இது குறித்து, தமிழ்நாடு தொலை தொடர்பு வட்ட விற்பனை பிரிவு பொது மேலாளர், கருணாநிதி கூறியதாவது: தமிழக தொலை தொடர்பு வட்டத்தில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட, தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மொபைல் போன்கள் பயன்பாடு அதிகரித்ததால், தொலைபேசி வாடிக்கையாளர்கள், இணைப்பை திருப்பித் தருவது அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில், 7,000பேர் திருப்பித் தருகின்றனர்.அந்த எண்ணிக்கையை குறைக்க, தற்போது, இணைப்பை சரண்டர் செய்ய வருவோரை அழைத்து பேசுகிறோம்.
அவர்களிடம், இணைப்பை ரத்து செய்வதற்கான காரணங்களை கேட்கிறோம். அவர்கள் கூறும் குறைகளை, உடனடியாக சரி செய்வதாக வாக்குறுதி அளிக்கிறோம். அதனால், தரைவழி இணைப்பை தொடர, பலர் சம்மதித்து உள்ளனர். தற்போது, ஒரு மாதத்திற்கு, 7,000 பேர், புதிய இணைப்பு பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025