Saturday, October 14, 2017


தீபாவளி: பேருந்து சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் திறப்பு


By DIN  |   Published on : 14th October 2017 04:01 AM  
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் வெள்ளிக்கிழமை (அக்.13) முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.
இது குறித்த விவரம்: தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 15) முதல் 17-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 11,645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, சென்னை கோயம்பேட்டில் சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானட்டோரியம்... சிறப்புக் கவுன்ட்டர்கள் கொண்ட முன்பதிவு மையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். 
சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு வசதியாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் 26 டிக்கெட் முன்பதிவு மையங்கள், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையம், தாம்பரம் சானட்டோரியத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 29 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. 
இந்த முன்பதிவு மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

    No comments:

    Post a Comment

    Blank screen? Might be a sextortion call

    Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...