Sunday, October 15, 2017


சதம் அடிக்கும் காய்கறிகளின் விலை! - எப்போது குறையும்?

அஷ்வினி சிவலிங்கம்

Chennai:

தீபாவளி நெருங்கிவிட்டது. காய்கறிகளின் விலை சதம் அடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக சின்ன வெங்காயம், முருங்கைக் காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.




இனிவரும் நாள்களில் காய்கறிகளின் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து கோயம்பேடு மலர், காய், கனி, மலர் வியாபாரிகள் சங்கத்தின் துணைத்தலைவர் சுகுமார் பேசுகையில் ‘தக்காளி விலை உயரத் தொடங்கிவிட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களாகவே அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. கிலோ நூறு ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

சின்ன வெங்காயம் 90% தமிழகத்தில் இருந்து தான் கோயம்பேடு சந்தைக்கு வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது. அதற்கு முந்தைய ஆண்டு தமிழகம் வெள்ளத்தில் மிதந்தது. இதுபோன்ற காலநிலை மாற்றத்தாலும், பருவ மழை பொய்த்துவிட்டதாலும் சின்ன வெங்காயம் உள்ளிட்டவற்றின் விளைச்சல் குறைந்துவிட்டது. தீபாவளி பண்டிகை முடிந்தபின்னரும் சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்பில்லை. தக்காளி, கத்திரிக்காய், வெண்டய்காய், பீன்ஸ், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்களின் விலை இன்னும் ஒரு மாதத்துக்கு ஏற்றத்துடன் தான் இருக்கும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் காய்கறிகளின் விலை குறையும்’ என்றார்.






No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2025