Tuesday, February 24, 2015

வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு: மாதம் இரு சனிக்கிழமை விடுமுறை

புதுடில்லி:ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது.

முழுநேரம் இயங்கும்:

புதிய ஒப்பந்தப்படி, மாதத்தில் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை. முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில், வங்கிகள் முழுநேரம் இயங்கும்.புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நவம்பர் மாதம் முதல், தொடர் போராட்டங்களை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்தது.இந்திய வங்கிகள் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், ஜனவரி மாதம் அறிவித்த தொடர் போராட்டத்தை, ஊழியர்கள் கூட்டமைப்பு ஒத்தி வைத்தது. அதன்பின், இரு தரப்புக்கும் நடந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்படாததால், மீண்டும் தொடர் போராட்டத்தை, ஊழியர்கள் அறிவித்தனர்.

ஒப்பந்தம்:

மும்பையில் நேற்று மீண்டும் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், ஊதிய உடன்பாடு எட்டப்பட்டது. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, 15 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம், வங்கிகளுக்கு ஆண்டுக்கு, 4,725 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதுவரை, வங்கிகள் சனிக்கிழமை, அரை நாள் இயங்கி வந்தன.இம்முறையில் மாற்றம்ஏற்பட்டுள்ளது. மாதத்தில், முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகள், முழு நேரம் இயங்குவது; இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிடப்படுகிறது:

வங்கி அதிகாரிகள் சங்க துணை பொதுச்செயலர் சீனிவாசன்கூறுகையில், ஊதிய உயர்வு ஒப்பந்தம் மற்றும் பிற கோரிக்கைகள் தொடர்பாக, இந்திய வங்கிகள் சங்கத்துடன், 11 சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த, வேலை நிறுத்தம் கைவிடப்படுகிறது.என்றார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...