உலகின் மிக வயதான இரட்டைச் சகோதரிகள் தள்ளாத முதிய வயதிலும் கூட வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்தோடும் கழித்து வருகிறார்கள். இவர்களைப் பார்த்தால் அதிசயமே அசந்து போகும் என்று கூட சொல்லலாம்.
ஃப்ளோரன்ஸ் டேவிஸ் - க்லென்ஸி தாமஸ் என்ற இவ்விரு பிரிட்டன் இரட்டைச் சகோதரிகளுக்கு தற்போது 103 வயதாகிறது.
கடந்த 1911ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி இந்த இரட்டைச் சகோதரிகள் 5 நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள்.
இவர்களுக்கு திருமணமாகி 5 குழந்தைகள், 12 பேரப் பிள்ளைகள், 19 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். தங்களது வாழ்நாள் முழுவதும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்த இவ்விருவரும் தற்போது முதியோர் பாதுகாப்பு இல்லத்துக்கு ஒன்றாகவே சென்றுள்ளனர்.
தங்களது பெரும்பாலான நேரத்தை ஒன்றாகவே செலவிடும் இவ்விருவரும், தங்களது வாழ்க்கை மிக அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கழிந்ததாகக் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment