Thursday, February 26, 2015

'எச் 4' விசா வழங்க அமெரிக்கா முடிவு...dinamalar 26.02.2015

வாஷிங்டன்: கணவரோ அல்லது மனைவியோ, அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தால், அத்தகையவருக்கு, 'எச் 1 பி விசா' இருந்தால், அமெரிக்கா வந்து பணியாற்ற, அவரின் மனைவிக்கோ அல்லது கணவருக்கோ, 'எச் 4 விசா' வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு, கணவன் இந்தியாவிலும், மனைவி அமெரிக்காவிலும்; அல்லது மனைவி இந்தியாவிலும், கணவன் அமெரிக்காவிலும் என்ற பிரிவை போக்கும். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களால், குறிப்பாக இந்தியர்களால், நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த இந்த கோரிக்கை, இப்போது நிறைவேறியுள்ளது. வரும் மே மாதம், 26ம் தேதி முதல், இந்த புதிய நடைமுறைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால், முதல் ஆண்டில், 1.79 பேரும், அடுத்தடுத்த ஆண்டுகளில், 55 ஆயிரம் பேரும் பயன்பெறுவர். எனினும், சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, இந்தியர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதற்கு, ஒபாமா நிர்வாகத்திற்கு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024