பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சீதாராம் (18). இவர் மைசூரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது, சார்ஜர் போட்டப்படியே செல்போனை ஆன் செய்துள்ளார் சீதாராம். அப்போது பயங்கர சத்தத்துடன் செல்போன் வெடித்து சிதறியது. இதில் சீதாராமின் முகம் சிதைந்தது.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நண்பர்கள் பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றர். அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சீதாராமின் தொடை பகுதி தோலை எடுத்து முகத்தில் ஒட்டி தையல் போட்ட மருத்துவர்கள், கீழ் தாடை பகுதியின் முக்கிய எலும்பு சேதம் அடைந்து நொறுங்கி விட்டதால் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்து விட்டார். ஆனால், முன்னர் இருந்த அந்த அழகிய முக அமைப்பை அந்த வாலிபர் மீண்டும் பெற பல லட்சம் ரூபாய் செலவும், பல ஆண்டு கால காத்திருப்பும் அவசியம்.
No comments:
Post a Comment