டெல்லியில் மின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள் ளது. மேலும், மாதம் 20,000 லிட்டர் குடிநீர் இலவசமாக விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக் கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 1-ம் தேதியிலிருந்து இந்த அறிவிப் புகள் அமலுக்கு வருகின்றன.
முதல்வர் கேஜ்ரிவால் தலை மையில் நடைபெற்ற அமைச்சர வைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று வெளியிட்டார். இதன்படி, டெல்லி யில் மாதம் 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கான மின்கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 401 அல்லது அதற்கு அதிகமாக யூனிட்டுகள் பயன்படுத்தும் மக்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். மின் கட்டணக் குறைப்பால் மொத்தமுள்ள 45.35 லட்சம் மின் நுகர்வோரில் 36.6 லட்சம் பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடிநீர் இலவசம்
குடிநீர் மாதம் ஒன்றுக்கு 20,000 லிட்டர் வரை பயன்படுத்தும் நுகர்வோர் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 20,000 லிட்டருக்கும் கூடுதலாகப் பயன் படுத்துபவர்கள் முழுக்கட் டணத்தையும் செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பால் 18 லட்சம் நுகர்வோர்கள் பலனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கடந்தமுறை ஆட்சிக்கு வந்த போது மின்கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டது. மாதம் 20,000 லிட்டர் குடிநீர் இலவசமாக விநியோகிக்கப் பட்டது. ஆனால், அதற்குப் பிறகு டெல்லியை நிர்வகித்தவர்கள் இத்திட்டத்தைத் தொடரவில்லை. எனவே, மீண்டும் அமல்படுத்தி யுள்ளோம்.
மின் கட்டணக்குறைப்பால் கூடுதலாக மாதம் ரூ.70 கோடியும், அடுத்த நிதியாண்டில் ரூ. 1,427 கோடியும் செலவாகும். இலவச குடிநீர் விநியோகத்தால் மார்ச் மாதம் ரூ. 21 கோடியும், வரும் நிதியாண்டில் ரூ. 250 கோடி யும் கூடுதலாக செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்போதைய மின் கட்டணம்
தற்போது டெல்லியில் மின்கட்டணம், 200 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு தலா ரூ.2, அதற்கு மேல் 400 யூனிட் வரை தலா ரூ. 2.97, 400-க்கு மேல் 800 யூனிட்கள் வரை ரூ.7.30 வசூலிக்கப்படுகிறது.
சலுகையால் பயனில்லை
ஓய்வு பெற்ற தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:
டெல்லியில் 400 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காரணம், அங்கு குளிர்காலத்தில் அதிகளவில் வாட்டர் ஹீட்டர்களையும், கோடைக் காலத்தில் ஏ.சி.யையும் பயன்படுத்துகின்றனர். அதனால், அவர்களுக்கு இந்தக் கட்டண சலுகையால் பலன் கிடைக்கப் போவதில்லை. இதனால், அரசுக்கு மிகப் பெரிய அளவில் நிதிச் சுமை ஏற்படும் என தோன்றவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரை 500 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்து பவர்களுக்கு அரசு கட்டண சலுகை அளித்து வருகிறது. மேலும், டெல்லியைவிட தமிழகத்தில் மின்நுகர்வு அதிகமாக உள்ளது.
No comments:
Post a Comment