பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு 67% உயர்த்தப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில், மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய புதிய வசதிகள் - திட்டங்களின் விவரம்:
120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு
பயணிகள் இனி 60 நாட்களுக்கு பதிலாக, 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
தூய்மைக்கு தனித் துறை
* தூய்மைக்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கிறது. ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் தூய்மையை பராமரிக்கும் வகையில் தனித் துறை ஒன்று ஏற்படுத்தப்படும்.
* ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் உள்ள கழிப்பறைகளின் வசதிகளின் நிலை மேம்படுத்தப்படும். 650 ரயில் நிலையங்களில் புதிய கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* ரயில் பெட்டிகளில், சுற்றுசூழலுக்கு உகந்த கழிப்பறைகள் பொருத்தப்படும்.
* இந்த ஆண்டு இன்னும் 17,000 கழிப்பறைகள் மாற்றி அமைக்கப்படும். ஆறு மாதங்களுக்குள் நவீன தொழில்நுட்ப ரீதியான வாக்யூம் கழிப்பறைகளை கொண்டுவருமாறு ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர வடிவமைப்பை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
* படுக்கை விரிப்புகளுடன் கழிவுகளை சேகரிக்க ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் பையை வழங்குவதற்கான சாத்தியகூறும் கண்டறியப்படும்.
* குளிர்சாதன வசதி இல்லாத ரயில் பெட்டிகளிலும் குப்பை தொட்டி வசதி விரிவாக்கப்படும்.
* ஒருமுறை பயன்படுத்தக்கூடிய படுக்கை விரிப்புகளை கணிணி வழியாக பதிவு செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படும்.
ஹெல்ப்லைன்கள்:
* 24 மணி நேரமும் உதவி பெறும் வகையில் '138' எண் ஹெல்ப்லைன் வசதி.
* பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை தெரிவிக்க, கட்டணமில்லாத வகையில் 182 எண்ணுள்ள தொலைபேசி வசதி.
5 நிமிடத்தில் பயணச் சீட்டு
* பயணச்சீட்டை எளிதாக பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை 5 நிமிடங்களில் பெறுவதற்கு 'ஆபரேஷன் 5 மினிட்ஸ்' என்ற புதிய வசதி.
* சில்லறை பெறுவதற்கான இயந்திரம், மாற்று திறனாளிகள் சலுகை கட்டணத்தில் கணினிவழியாக பயணச்சீட்டுகளை பெறுதல்.
* ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான பணத்தை நேரடியாக வங்கி கணக்குகளில் சேர்த்தல்.
* ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை பெறுதல் அறிமுகம்.
* விரும்பிய உணவை தெரிவு செய்து பெறுவதற்கு கணினிவழி வசதியை ஏற்படுத்துதல். ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் டிக்கட்டை முன்பதிவு செய்யும்போது உணவிற்கும் பதிவு செய்யும் வசதி, தரமான உணவை வழங்கம் வகையில் தெரிவுசெய்யப்பட்ட கோட்டங்களில் பிரபல முகமைகளின் சமையல் அறை கூடங்கள், குடிநீர் விநியோக இயந்திர வசதி ஆகியவை இதில் அடங்கும்.
* பயணிகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் வகையில் டிக்கெட் பரிசோதனைகளுக்கு இயந்திர வசதி அளிக்கப்படும்.
* 2000 ரயில் நிலயங்களில் பொதுவான மையங்களின் வழியாக நிர்வகிக்கப்படும் ஒளிகாட்சி கட்டமைப்பு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும்.
* ரயில்களின் புறப்பாடு வருகை குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்தி சேவை மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
* மகளிர் பாதுகாப்பிற்கு உதவும் வகையில், சில குறிப்பிட்ட முக்கிய தட ரயில் பெட்டிகளிலும் புறநகர ரயில்களிலும் மகளிர் பெட்டிகளிலும் சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
பொதுப் பெட்டிகளிலும் மொபைல் 'சார்ஜ்' வசதி
* சில குறிப்பிட்ட சதாப்தி ரயில்களில் பொழுதுபோக்கு அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
* மொபைல் போன்களை 'சார்ஜ்' செய்யும் வசதி பொதுப் பெட்டிகளிலும் ஏற்படுத்தப்படும். படுக்கை வசதி பெட்டிகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.
வை-ஃபை வசதி
* பி-பிரிவு ரயில் நிலையங்களில் 'வை-ஃபை' சேவை அறிமுகப்படுத்தப்படும்.
* ரயில் நிலையங்களில் தாமே நேரடியாக பயன்படுத்தும் 'லாக்கர்' வசதி ஏற்படுத்தப்படும்.
* குறிப்பிடப்பட்ட ரயில்களில் கூடுதல் பயணிகள் பயணிக்க வசதி ஏற்படுத்தப்படும். மேலும், தெரிவு செய்யப்பட்ட பயணிகள் ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டிகள் சேர்க்கப்படும்.
* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் உயர் அடுக்குகளுக்கு செல்ல பயணிகளுக்கு வசதியான வகையில் ஏணிப்படிகளை அமைக்குமாறு தேசிய வடிவமைப்பு துறை கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு...
* மூத்த குடிமக்களுக்கு கீழ் நிலை படுக்கை வசதி அளிக்கப்படும்.
* மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கீழ் நிலை அடுக்குகளை வழங்க உதவி அளிக்குமாறு டிக்கெட் பரிசோதனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
* பெட்டிகளின் நடுப்பகுதி மூத்த குடிமக்களுக்கும் மகளிருக்கும் ஒதுக்கப்படும்.
* நகரும் படிகட்டுகள், உயர் தூக்கிகள் போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் 'பிரய்லி' வசதி ஏற்படுத்தப்படும்.
* மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தப்படும் வகையில் நுழைவாயில்கள் அகலமாக இருக்கும் வகையில் உருவாக்கப்படும்.
* பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு 67% அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு...
புதிய விவசாய முறைகளையும், சந்தைப்படுத்துதல் முறையைம் விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், விவசாய பயணம் (கிஸான் யாத்ரா) என்ற சிறப்பு பயண திட்டத்துக்கான ஜ.ஆர்.சி.டி.சி நடவடிக்கைகளை எடுக்கும்.
No comments:
Post a Comment