புதுடெல்லி: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் உயிர்ச்சான்று சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற முடியும் என்ற நடைமுறை உள்ளது. பென்ஷன் பேமன்ட் ஆர்டர் (பீபீஓ) அல்லது ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகத்துடன் நேரில் வர இயலாதவர்கள் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் கையெழுத்துடன் உயிர் சான்றிதழ் வழங்கலாம். இதை அரசு பதிவு பெற்ற மருத்துவ அலுவலரின் மருத்துவ சான்றிதழுடன் இணைத்து தபால் மூலமாக அனுப்பலாம். இந்த நடைமுறையின்படி ஓய்வூதியதாரர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் மட்டுமே அஞ்சல் மூலமாக அனுப்ப அனுமதிக்கப்படுகின்றனர். 4வது ஆண்டு அவர்கள் நேரில் ஆஜராகி உயிர்ச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், சில வங்கிகள் ஓய்வூதியர்களை பென்ஷன் பேமன்ட் ஆர்டர் உடன் நேரில் வர கட்டாயப்படுத்துவதாகவும், தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. எனவே, இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் ஓய்வூதியர் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஓய்வூதியம் தொடர்பாக ஏற்கெனவே உள்ள விதிமுறை களை வங்கிகள் பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் அரசு அலுவலர் கையெழுத்து பெற்ற உயிர்ச்சான்றிதழும், ஆதாரை அடிப்படையாக கொண்ட உயிர்சான்றிதழும் சமர்ப்பிக்கும் பட்சத்தில், பென்ஷன் வாங்குபவர்கள் நேரில் வந்தாக வேண்டும் என்று துன்புறுத்த கூடாது. வழக்கமான நடைமுறைக்கு மாற்றாக டிஜிட்டல் பைல் சர்டிபிகேட் சேவை இருப்பதை வங்கிகள் நினைவில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரிவான சுற்றறிக்கை ஒன்று அனைத்து வங்கிகளுக்கு அனுப்பியுள்ளோம்’ என்றார்.

No comments:
Post a Comment