கிரேம் ஹிக் வயது அப்போது 17. ஜிம்பாப்வேயிற்கு டெஸ்ட் தகுதி கிடைக்கவில்லை. கபில் 175 ரன்கள் அடித்த போட்டியின் போது கடைசி 10 ஓவர்கள் ஜிம்பாப்வே அணிக்கு பதிலி வீரராக பீல்டிங் செய்துள்ளார் கிரேம் ஹிக்.
இந்த அனுபவம் பற்றி கிரேம் ஹிக் பகிர்ந்து கொண்ட போது, “அவர் ஆட்டததைப் பார்த்து மிரண்டு போனேன், கபிலின் பேட்டிங் என்னை வியப்பில் ஆழ்த்தியது. கடைசி 10 ஓவர்கள் நான் பதிலி வீரராக பவுண்டரி அருகே பீல்ட் செய்து கொண்டிருந்தேன். எப்படியும் என்னிடம் கேட்ச் கொடுப்பார் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.” என்று கபிலின் உலகப் புகழ் பெற்ற இன்னிங்சை விதந்தோதியுள்ளார்.
கிரேம் ஹிக், இங்கிலாந்துக்கு விளையாடிய ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர். 65 டெஸ்ட் போட்டிகளில் 3,383 ரன்களை 31.32 என்ற சராசரியில் எடுத்தவர். இதில் 6 சதங்கள் 18 அரைசதங்களை அவர் எடுத்துள்ளார். 120 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 3,846 ரன்களை 5 சதங்கள் 27 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்கள் 178, ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: 126 நாட் அவுட்.
முதல் தர கிரிக்கெட்டில் 526 போட்டிகளில் 41,112 ரன்களை 52.23 என்ற சராசரியின் கீழ் 136 சதங்கள், 158 அரைசதங்களுடன் எடுத்தவர். இதில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 405 நாட் அவுட்.
கெவின் பீட்டர்சன் போல் திறமை மிக்க பேட்ஸ்மென் கிரேம் ஹிக். ஆனால் டெஸ்ட் வாழ்க்கையில் இவர் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவுக்கு சோபிக்கவில்லை. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் இவரை பாடாய்ப் படுத்தி எடுத்தனர். ஆனாலும் கடினமான பிட்ச்களில் இவரது திறமை பல சமயங்களில் வெளிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment