Tuesday, February 17, 2015

ஐஃபோனை விட கிரிக்கெட் பேல்ஸ் விலை அதிகம்!



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் ஒரு பேல்சின் விலை, ஐ போனை விட அதிக விலை ஆகும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்போது பயன்படுத்தப்படும் ஒரு செட் எல்இடி ஸ்டம்புகளின் விலை 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 லட்சம். அதுபோல் ஸ்டம்புகளின் மேல் இருக்கும் இரண்டு பேல்ஸ்களின் விலை தலா ரூ.50 ஆயிரம் ஆகும். இது ஒரு ஐஃபோனை விட அதிகம்.

இந்த ஸ்டம்புகளின் ஸ்பெஷல் என்னவென்றால், பந்து ஸ்டம்பில் பட்ட அடுத்த வினாடியில் விளக்கு எரிந்து விடும். இதனால் நடுவர்கள் எளிதாக அவுட்டா இல்லையா என்பதை தீர்மானித்து விடலாம்.எல்இடி ஸ்டம்புகள் முதல்முறையாக ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கு பின் கடந்த 2013ஆம் ஆண்டு பங்ளாதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டன. அந்த தொடரில் எல்இடி ஸ்டம்புகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்தையடுத்து, இந்த உலகக் கோப்பை போட்டியிலும் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற்ற அணி வீரர்கள், ஓடி போய் ஸ்டம்புகளை கையில் எடுத்து வெற்றியை கொண்டாடுவது வழக்கமானது.இப்போது விலைஉயர்ந்த இந்த எல்இடி ஸ்டம்புகளை தேவையில்லாமல் கையில் எடுக்க கூடாது என்று வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் தோனி வழக்கமாக வெற்றி பெற்றவுடனேயே ஸ்டம்பைதான் ஓடி போய் கையில் எடுப்பார். இந்த தடை காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போது, தோனி ஸ்டம்புகளை கையில் எடுத்து வெற்றியை கொண்டாடவில்லை. அந்த வகையில் தோனி ஸ்டம்பிங் செய்யப்பட்டு விட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024