காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் வயல்கள் சூழ்ந்த இயற்கை சூழலில் அமைந்துள்ள ஊர் பொன்மார்! இத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சக்திபுரீஸ்வரி உடனாய சக்திபுரீஸ்வர்!
கிழக்கு நோக்கிய திருக்கோயிலின் வடக்குப் பகுதியில் அல்லி மலர்கள் மலர்ந்திருக்கும் அழகிய திருக்குளம் உள்ளது. இந்த திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபத்துடன் காட்சி தருகிறது.
கருவறைக்கு முன்பாக முக மண்டபத்தில் இடதுபுறம் சிரசை சற்றே தாழ்த்திய அழகிய விநாயகரைக் காணலாம். பக்தர்களின் குறை கேட்டு அருள்புரியும் பாவனையில் அமைந்துள்ளார். இடது புறத்தில் மயில்வாகனனாகக் காட்சித் தருகிறார் முருகப்பெருமான்.
முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. மேற்கரங்களில் அங்குசம்- பாசம் தாங்கி, கீழிரு கரங்களில் அபய- வரத முத்திரைத் தாங்கி அருள்புரிகிறார் சக்திபுரீஸ்வரி.
கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியுடன் காட்சி அளித்து அருள் வழங்குகின்றார். கருவறையின் வெளிப்புறச்சுவர் சிற்பக் களஞ்சியமாக விளங்குகிறது. அடித்தளப்பகுதியில் (அதிட்டானம்) விருத்த குமுதம், கபோதகம் என்ற அமைப்புகளுடன் விளங்குகிறது. விநாயகர், யோக நரசிம்மர், பைரவர், பூதகணம், வல்லபையுடன் கணபதி, நடராஜர், திருபுராந்தகர் போன்ற சிறு சிற்பங்கள் காணப்படுவது அக்கால சிற்பிகளின் கலைத்திறனை எடுத்து காட்டுகிறது.
முகமண்டபத்தில் நடனமாடும் பிள்ளையார், மகிஷாசுரமர்த்தினி, ராமர், ஆஞ்சநேயர், லிங்கத்தின் மீது பால்சொரியும் பசு, விஜயநகர மன்னர்களின் அரச முத்திரையான கண்டபேருண்ட பறவை சிற்பம் போன்றவை புடைப்புச் சிற்பங்களாக அழகு செய்கின்றன.
இக்கோயிலில் காணப்படும் விஜயநகர மன்னர் சதாசிவராயர் கல்வெட்டின் மூலம் இவ்வூர், தியாகவினோத நல்லூர் எனவும் பொன்மாறு என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இங்கு வீரபத்திர நாயனார் என்ற கோயிலும் இருந்ததை கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. அந்தக் கோயிலுக்கான திருப்பணிகளை பொன்மார் சக்திபுரீஸ்வரர் அறக்கட்டளையினர் மேற்கொண்டு வருகின்றனர். இத்திருப்பணியில் பக்தர்கள் பங்கு கொண்டு பலன் பெறலாம்.
மகா சிவராத்திரி அன்று (17.02.2015) அன்று கணபதி ஹோமம், ருத்ர பாராயணம், 108 சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனை சிறப்பாக நடைபெறுகிறது.
சென்னை- தாம்பரம், தி.நகர் மற்றும் சைதாப்பேட்டையிலிருந்து நகர பேருந்துகள் பொன்மார் செல்கின்றன.
தொடர்புக்கு: எஸ். தியாகராஜன் - 99625 94861/ பி.ஜே. ரத்ன குமார் - 94444 13193.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீதரன்.

No comments:
Post a Comment