Wednesday, October 4, 2017

துணை மருத்துவ படிப்புகள் இன்று மீண்டும், 'கவுன்சிலிங்'

சென்னை: துணை மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள, 2,772 இடங்களை நிரப்புவதற்கானகவுன்சிலிங், விடுமுறைக்கு பின், இன்று மீண்டும் துவங்குகிறது.
பி.எஸ்சி., நர்சிங்., - பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள, 8,003 இடங்களில், 5,231 இடங்கள் நிரம்பின. மீதம், 2,772 இடங்கள் காலியாக உள்ளன.
ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் கவுன்சிலிங் நடைபெறுகிறது. மீதமுள்ள, 2,772 இடங்களுக்கு, தரவரிசை பட்டியலில், 8,507 முதல், 12 ஆயிரத்து, 849 இடங்கள் பெற்றுள்ள, 4,342 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 
'வரும், 7 வரை, கவுன்சிலிங் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துஉள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...