Tuesday, October 10, 2017

துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் 11 கிலோ தங்கத்தை விழுங்கி கடத்திய 46 பேர் சிக்கினர்
2017-10-10@ 00:55:05




அவனியாபுரம்: துபாயிலிருந்து நேற்று முன்தினம் இரவு 91 பயணிகள் தனியார் விமானத்தில் மதுரை வந்தனர். இதில் 46 பேர் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்திறங்கிய அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஸ்கேன் சோதனையில் 29 பேர் தங்கக்கட்டிகளை விழுங்கி, வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. தங்கத்தை சிறு பாலித்தீன் கவரில் பேக்கிங்குகளாக போட்டு விழுங்கியது தெரிந்தது. மற்ற 17 பேரும் தங்கத்தை தகடாக்கி, அதனை பெட்டி, கைப்பையில் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நூதனமாக மறைத்து வைத்துக்கொண்டு வந்திருந்தனர். விழுங்கி கடத்தி வந்த 29 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் எனிமா தரப்பட்டு தங்கம் வெளியேற்றப்பட்டது.

கடத்தி வந்தவர்களிடம் நேற்று மாலை வரை விசாரணை நடந்தது. அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இதுவரை தங்கக்கட்டிகளை விழுங்கி கடத்திய ஒரு சிலரே சிக்கினர். ஆனால், ஒரே விமானத்தில் 46 பேர், 11 கிலோ தங்கத்தை கடத்தி வந்திருப்பது இதுவே முதல்முறை. இதன் மதிப்பு ₹3 கோடி. கடத்தலில் பெண்களும் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிக்கியவர்களில் பலர் அடிக்கடி விமான பயணம் மேற்கண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தங்கம் சிக்கினால் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். இந்த 46 பேரிடமும், கடத்தலுக்காக இந்த தங்கத்தை கொடுத்தது யார்? யாருக்காக கடத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்,’’ என்றார்.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...