Friday, October 13, 2017

சுற்றுலா பயணியருக்கு பிரான்ஸ் அழைப்பு




சென்னை: ''பிரான்ஸ் செல்லும், இந்திய சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை, அதிகரிக்க செய்யும் வகையில், தற்போது, 48 மணி நேரத்தில், 'விசா' வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என, பிரான்ஸ் சுற்றுலா மேம்பாட்டு நிறுவன இயக்குனர், ஷீட்டல் முன்ஷா கூறினார்.

சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: இந்தியர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், சுற்றுலா அனுபவங்களை வழங்குவதில், பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது. இதனால், பிரான்ஸ் நாட்டிற்கு, சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2016ல், ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் வந்துள்ளனர். இது, 2014ஐ காட்டிலும், 53 சதவீதம் உயர்வு.பிரான்சில், ஏராளமான சுற்றுலா இடங்கள், தலைசிறந்த சின்னங்கள், வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள் உள்ளன. 2024ல், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள், பிரான்சில் நடக்க உள்ளன. எனவே, இந்தியர்களின் வருகையை அதிகரிக்கும் வகையில், 48 மணி நேரத்தில், 'விசா' வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை - பாரீஸ் இடையே, தினசரி விமான சேவையும் துவக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025