Saturday, October 14, 2017

தீபாவளி சலுகைகள் அறிவிப்பில் போன் நிறுவனங்கள் போட்டி

தீபாவளியை முன்னிட்டு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு, போட்டி போட்டு சலுகைகளை வாரி வழங்குகின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்ளுக்கு இடையே, 'ஜியோ'வின் வருகைக்குப் பின், கடும் போட்டி நிலவி வருகிறது. 

அதுவரை, 28 நாள் பயன்பாடு உடைய, ஒரு ஜி.பி., 'இன்டர்நெட் டேட்டா'வை, 260 - 292 ரூபாய்க்கு விற்ற, 'ஏர்டெல்' உள்ளிட்ட சில நிறுவனங்கள், ஒரு நாளுக்கு, ஒரு ஜி.பி., டேட்டாவை, இலவசமாக தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.இந்தச் சூழலில், தீபாவளி நெருங்குவதால், வாடிக்கையாளர்களை கவர, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், போட்டி போட்டு சலுகைகளை அறிவித்துள்ளன. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., 15ம் தேதி வரை, 160 ரூபாய்க்கு, 'ரீசார்ஜ்' செய்தால், முழு, 'டாக் டைம்' வழங்குகிறது. இது போல், அக்., 16., முதல், 25 வரை, 290 ரூபாய்க்கு, ரீசார்ஜ் செய்தால், 435 ரூபாய்; 390 ரூபாய்க்கு செய்தால், 585 ரூபாய்; 590 ரூபாய்க்கு செய்தால், 885 ரூபாய்க்கு ஈடாக பேசிக் கொள்ளலாம் என்றும், அறிவித்து உள்ளது.

ஏர்டெல் நிறுவனம், 'போஸ்ட் பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, 999 ரூபாய் சலுகை திட்டத்தை, தீபாவளிக்கு அறிவித்துள்ளது. அதன்படி, 'ரோமிங்' உட்பட, அனைத்து அழைப்புகள், ஒரு மாதத்திற்கு இலவசம். 
ஒரு மாதத்திற்கு, 50 ஜி.பி., டேட்டாவும் இலவசம். டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்தாவிட்டால், அடுத்தடுத்த மாதங்களில், பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், ஆறு மாதங்களுக்கு, வாடிக்கையாளர் மொபைல் போனுக்கு, 'வாரன்டி' வழங்கப்படுகிறது. இதை, ஜியோ அறிவித்துள்ள, 90 ஜிபி., டேட்டா பயன்பாடு உடைய, 999 ரூபாய், 'போஸ்டு பெய்டு' திட்டத்திற்கு போட்டியாக, 'ஏர்டெல்' வழங்கியுள்ளது.

'ஜியோ' நிறுவனம், தீபாவளிக்கு, தன் பங்குக்கு, 100 சதவீத, 'கேஷ் பேக்' சலுகையை 
அறிவித்துள்ளது. 

அதன்படி, அக்., 12 - 18 வரை, 399 ரூபாய்க்கு, 'ரீசார்ஜ்' செய்தால், 84 நாட்களுக்கு, 84 ஜி.பி., டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது; அனைத்து அழைப்புகளும் இலவசம். அத்துடன், 399 ரூபாய்க்கு ஈடாக, 50 ரூபாய், 'ரீசார்ஜ்' கூப்பன்கள் தரப்படுகிறது. அவற்றை, நவ., 15க்குப் பின் தந்து, ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...