குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்க வலியு।றுத்தல்
பதிவு செய்த நாள்
14அக்2017
02:18
சென்னை: 'அரசு அலுவலக உதவியாளர்கள், ஊதிய உயர்வு இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்' என, தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மைய சங்கம் கூறியுள்ளது.
முதல்வருக்கு சங்கத் தலைவர், கணேசன் அனுப்பியுள்ள மனு:
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அமலாகும் போதே, 'டி' பிரிவு பணியாளர்களுக்கு, அடிப்படை சம்பளம், 5,200 ரூபாய் என, மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், தமிழக அரசு, அடிப்படை சம்பளம், 4,800 ரூபாய் என, அறிவித்தது. எனவே, ஏழாவது ஊதியக்குழுவில், ஊதிய மாற்றம் வழங்கக் கோரினோம். ஆனால், தற்போது மாற்றம் செய்யாமலே, ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து, 700 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, 18 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளது. எனவே, குறைந்தபட்ச ஊதியம், 18 ஆயிரம் ரூபாய் என, அரசாணை வெளியிட வேண்டும்.
அதேபோல், தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதிய பணியாளர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment