தீபாவளி கொண்டாட பரோலில் செல்லும் 150 சிறை கைதிகள்
பதிவு செய்த நாள்
14அக்2017
01:45
மதுரை: குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடும் வகையில், மதுரை சிறை கைதிகள் 150 பேர் பரோலில் செல்கின்றனர். இச்சிறையில் ஆயிரத்து 200 கைதிகள் உள்ளனர். இவர்களில் 600 க்கும் மேற்பட்டோர் தண்டனை கைதிகள். தண்டனை கைதிகளுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்படும். ஆறு, ஆறு மற்றும் மூன்று நாட்கள் வீதம் அவர்களுக்கு பரோல் வழங்கப்படும்.
குடும்ப விசேஷம், உடல் நலமில்லாத உறவினர்களை காண தண்டனை கைதிகள்
இதை பயன்படுத்தி செல்வர். குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடும் வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பரோலில் செல்ல அனுமதி கோரி 150 கைதிகள் வரை கண்காணிப்பாளர் ஊர்மிளாவிடம் விண்ணப்பித்துள்ளனர். அக்., 16 ம் தேதி முதல் அவர்கள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி உட்பட எந்த பண்டிகைக்காவும் பரோல் வழங்கப்படுவதில்லை. ஆண்டுக்கு 15 நாட்கள் வழங்கப்படும் பரோலை பயன்படுத்தி தீபாவளி, பொங்கல் நேரத்தில் கைதிகள் சென்று வருகின்றனர், என்றனர்
No comments:
Post a Comment