Sunday, October 15, 2017

தரமற்ற இனிப்பு, காரம் விற்றால் 'வாட்ஸ் ஆப்'பில் புகார்
தெரிவிக்கலாம்

 தரமற்ற இனிப்பு, காரம் விற்றால்  'வாட்ஸ் ஆப்'பில் புகார் தெரிவிக்கலாம்
சென்னை, :'தீபாவளியை முன்னிட்டு, தரமற்ற இனிப்பு மற்றும் காரம் பொருட்களை விற்றால், 'வாட்ஸ் ஆப்'பில் புகார் தெரிவிக்கலாம்' என, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுடன், உணவு பாதுகாப்பு துறை சார்பில், சென்னை, புரசைவாக்கத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின், இனிப்பு மற்றும் காரம் விற்பனை செய்யும் கடைகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த, 'நோட்டீஸ்' கடைகளுக்கு வழங்கப்பட்டது.அதே போல், இனிப்பு பொருட்கள் வாங்க, நுகர்வோர் கவனிக்க வேண்டியவை குறித்தும், நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
● அதிகப்படியான வண்ண நிறமிகள் சேர்த்த, இனிப்பு வகைகளையும், ஈக்கள் மொய்க்கும் துர்நாற்றம் வீசும், இனிப்பு மற்றும் கார வகைகளையும் தவிர்க்க வேண்டும்
● 'பேக்கிங்' செய்யப்பட்ட பால் வகை இனிப்புகள், மற்ற இனிப்புகளுடன் சேர்ந்திருந்தால், வாங்குவதை தவிர்க்க வேண்டும். பாலால் செய்யப்பட்ட இனிப்புகள், சேமிக்கும் நிலை, காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டு உள்ளதா என்பதை, கவனிக்க வேண்டும்
● உணவு அங்காடிகளில், முறையான ரசீது பெற்றிருத்தல் வேண்டும். அங்கு பணியாளர்கள் சுத்தமாக இருக்கின்றனரா; சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய், நெய் விபரங்கள், தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளதா; அங்கு உள்ள பிளாஸ்டிக் கொள்கலன்கள் தரமாக உள்ளதா என்பதை, கவனிக்க வேண்டும்
● 'பேக்கிங்'கில் சேர்ம பொருட்களின் விபரம், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், தயாரிப்பாளரின் முகவரி போன்றவை உள்ளனவா என, கவனித்து வாங்க வேண்டும். மேலும், இது குறித்த புகார்களை, உணவு பாதுகாப்பு துறையின், 94440 42322 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...