Sunday, October 15, 2017

டெங்குவுக்கு சிகிச்சையளித்த 2 போலி டாக்டர்கள் கைது
2017-10-15@ 01:22:12




சென்னை: பெரிய காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவை சேர்ந்தவர் திருமலை (35). பிஎஸ்சி கெமிஸ்ட்ரி பட்டதாரி. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் கிளினிக் வைத்து, இப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், சளி உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். தற்போது, மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி சுகாதார துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தி, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்களையும் கண்டுபிடித்து கைது செய்கின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மண்டல அதிகாரி கல்பனா, நகராட்சி நகர் நல அலுவலர் முத்து ஆகியோர் தலைமையில் சுகாதார அதிகாரிகள் நேற்று மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, திருமலை முறையான மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரிந்தது. மேலும், டெங்கு காய்ச்சல் உள்பட பல நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் மருந்து, ஊசி போடுவது தெரியவந்தது. புகாரின்படி சிவ காஞ்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்: திருவள்ளூர் மாவட்டம் சோளிங்கர், பாண்டியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட் (41). இவர், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் ரத்த பரிசோதனை மையம் நடத்தி வந்தார். இங்கு, அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், ராபர்ட் 10 வகுப்பு படித்துவிட்டு டாக்டர் தொழில் செய்து வருவதாகவும், தற்போது டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் மாவட்ட சுகாதராத்துறை இணை இயக்குனர் தயாளனுக்கு தகவல் கிடைத்தது. அவர், திருத்தணி போலீசார் துணையுடன் மேற்கண்ட பரிசோதனை மையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, ராபட் போலி டாக்டர் என்பது உறுதியானது. அவரை கைது செய்த போலீசார், திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...