Sunday, October 15, 2017

தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மாதம் ரூ.20,000 வழங்க வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்


2017-10-15@ 00:53:00




சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ெவளியிட்ட அறிக்கை: டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் தனியார் மருத்துவமனையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், செவிலியர்களின் போராட்டத்தால் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், குறிப்பாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மிகமிகக் குறைவு ஆகும். தனியார் மருத்துவமனை செவிலியர்களின் பரிதாப நிலை குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு செய்யவும், அவர்களுக்கான ஊதிய விகிதங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கவும் வல்லுனர் குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது.

அதன்படி ஆய்வு செய்த குழு அளித்த பரிந்துரைகளின்படி தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது. அதை உடனடியாக செயல்படுத்தும்படி மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு, இதுதொடர்பாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றும்படியும் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், கேரளம் தவிர்த்து இந்தியாவின் எந்த மாநிலத்திலும் செவிலியருக்கு புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

செவிலியர்களுக்கு தமிழக அரசின் ஆதரவு இல்லை என்பதால் அவர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிகளில் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. சில தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு அறிவுரைப்படி செவிலியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக 20,000 ரூபாயும், 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இதற்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்து, செவிலியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...