Sunday, October 15, 2017

ஸ்டேட் வங்கி ஏடிஎம் கார்டில் ரூ.5 லட்சம் வரை வாங்கலாம்

2017-10-14@ 00:02:14




பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் கட்டணம் ஏதுமின்றி ஒரு நாளில் ரூ.2 லட்சம் வரை பணம் எடுக்கலாம். ரூ.5 லட்சம் வரை ஏடிஎம் கார்டு மூலம் 5 லட்சம் வரை ஆன்லைனில் பொருட்கள் வாங்கலாம். பாரத ஸ்டேட் வங்கி கிளாசிக் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.40,000 வரை பணம் எடுக்கவும், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு நாளொன்றுக்கு ரூ.50,000 வரையிலும் பயன்படுத்தலாம். இந்த கார்டு வழங்க ரூ.300, ஆண்டு கட்டணமாக ரூ.100 ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

இதுபோல் பிரைடு மாஸ்டர் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரையிலும், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு ₹2 லட்சம் வரையிலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் பயன்படுத்தலாம். இந்த கார்டு வழங்க ரூ.300, ஆண்டு பராமரிப்பாக ரூ.250 ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. பிளாட்டினம் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரையிலும், ஆன்லைன் ்பரிவர்த்தனையாக ₹5 லட்சம் வரையிலும் பயன்படுத்தலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில், ரிசர்வ் வங்கி விதிகளின்படி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறை இலவச ஏடிஎம் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...