Sunday, October 15, 2017

குழந்தையின் இருமலுக்கு வாங்கிய மருந்து பட்டு தங்க நகை வெளுத்தது : புகார் செய்த பெற்றோருக்கு மருந்து கம்பெனி மிரட்டல்
2017-10-15@ 00:28:20




திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள காட்டாக்கடை அருகே பிலாவிளை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியரின் இரண்டரை வயது குழந்தைக்கு கடுமையான இருமல் ஏற்பட்டதால் அருகில் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர் இருமலுக்கான டானிக் ஒன்றை எழுதி கொடுத்தார்.

பெற்றோர் அதை வாங்கி குழந்தைக்கு கொடுத்தனர். இரண்டாவது முறை மீண்டும் மருந்தை கொடுக்க முயன்றபோது குழந்தை தட்டி விட்டுள்ளது. இந்த மருந்து தெறித்து குழந்தை கழுத்தில் கிடந்த தங்க செயினிலும், தாயின் தங்க செயினிலும் பட்டுள்ளது. சிறிது நேரத்தில் செயினில் மருந்து பட்ட இடம் அப்படியே வெளுக்க தொடங்கியது. இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை உதவியுடன் மருந்து நிறுவன பிரதிநிதியிடம் பேசியபோது, மாதம் 10,000 மேல் விற்கும் மருந்து இது. இதுபற்றி சமூக வலைதளத்தில் ஏன் பதிவு போட்டீர்கள். நாங்கள் யார் என்று உங்களுக்கு காட்டுகிறோம்; எச்சரிக்கை என்று குழந்தையின் பெற்றோரை மிரட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...