Sunday, October 15, 2017

சர்க்கரை அளவை குறைக்கும் வெண்டைக்காய்

2017-10-13@ 14:41:54




நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிமையான மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில், சிறுநீர்தாரை எரிச்சலை போக்க கூடியதும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டதும், மூட்டுவலியை குணப்படுத்த கூடியதுமான வெண்டைக்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

பல்வேறு நன்மைகளை உடையது வெண்டைக்காய். இந்த செடியின் இலைகள், வேர், காய்கள் ஆகியவை மருந்தாகி பயன்தருகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. ஆண்மலட்டு தன்மையை சரிசெய்கிறது. எலும்புகளுக்கு பலம் தருகிறது. புற்றுநோய்களுக்கு காரணமாக விளங்கும் நச்சுக்களை அளிக்கிறது. வெண்டைக்காயை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் எடுக்கவும். இதில், வெண்டை செடியின் வேரை நசுக்கி போட்டு கொதிக்க வைக்கவும். இந்த தேனீர் கொளகொளப்பு தன்மையுடன் இருக்கும். இதை வடிகட்டி குடித்துவர வெள்ளைப்படுதல், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். கொப்புளங்களை குணப்படுத்துகிறது. தோல்நோய்களை சரிசெய்கிறது. பால்வினை நோய்க்கு மருந்தாகிறது.

உணவாக மட்டுமின்றி மருந்தாக பயன்படும் வெண்டை காய்களை சாப்பிடும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. வெண்டைக்காயை பயன்படுத்தி சர்க்கரையின் அளவை குறைக்கும் மற்றும் மூட்டுவலியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வெண்டைக்காய், மிளகு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். அதிக முற்றாத 2 வெண்டை பிஞ்சுகள் எடுத்து நீளவாக்கில் வெட்டவும். இதை தண்ணீரில் ஊற வைக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மூட்டுவலி குணமாகும். எலும்புகள் பலவீனமடைவதால் ஏற்படும் வலியை போக்கும். மூட்டுகளில் நீர் தேங்கி ஏற்படும் பிரச்னை சரியாகும். 
 
வெண்டையின் துளிர் இலைகளை பயன்படுத்தி கழிச்சல், சீத கழிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வெண்டை இலைகள், சர்க்கரை.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் வெண்டை இலைகளை துண்டுகளாக்கி போடவும். சிறிது சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர கழிச்சல், சீத கழிச்சல் சரியாகும்.வெண்டை இலைகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. நுண்கிருமிகளை போக்கும். நோய்கிருமிகளை நீக்கும். வயிற்று போக்கை நிறுத்தும். வெண்டை இலை, இளம் காய்களை அரைத்து மேலே பூசும்போது அரிப்பு தரும் தோல்நோய்கள் சரியாகும். வெண்டைக்காய் எலும்புக்கு பலம் தரக்கூடியது. அற்புதமான உணவாக விளங்கும் இதை அடிக்கடி உணவில் சேர்ப்பது பலன் தரும். கம்பளி பூச்சி கடிப்பதால் ஏற்படும் அரிப்பை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். கம்பளி பூச்சியின் மயிர்கால்கள் படுவதன் மூலம் தோலில் அரிப்பு ஏற்படும். இதற்கு முருங்கை இலை மருந்தாகிறது. கம்பளி பூச்சியால் ஏற்படும் அரிப்பு உள்ள இடத்தில் முருங்கை இலைகளை அரைத்து மேலே பூசுவதால் வெகு சீக்கரத்தில் அரிப்பு அகன்று போகும்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...