விஷக்குளவிகள் கடித்து முதியவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்
By பா.சுஜித்குமார் | Published on : 09th October 2017 08:59 PM
புதுச்சேரி: புதுச்சேரி அருகே விஷக்குளவிகள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 4 பேர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
புதுவை அடுத்த பாகூர் மணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் வயலில் வேலைக்காக சென்றனர். அப்போது டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்தனர். அருகே இருந்த பனை மரத்தில் இருந்து வந்த விஷக்குளவிகள் திடீரென வந்து அவர்களை கடித்தன. இதில் ராமசாமி (70) என்ற விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த மீதமுள்ள 4 úர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விஷக் குளவிகள் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment