தீபாவளிக்கு நகை வாங்கப் போகிறீர்களா?!
By ஹரிணி | Published on : 09th October 2017 04:34 PM | அ+அ அ- |
தீபாவளி வந்து விட்டது...
அட்சய திருதியைக்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் எல்லா விதமான விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போதும் கூட மக்கள் நகைகள் வாங்க விரும்புகின்றனர். தங்கம், வெள்ளி, வைரம், வெள்ளைத்தங்கம், பிளாட்டினம் என சில உலோகங்கள் மட்டும் தான் எப்போதுமே இந்தியர்களான நமது ஏகதேச விருப்பங்களாக இருக்கின்றன. இந்த வகைகளிலும் கூட வைரம் என்பது கோடீஸ்வரர்கள் மற்றும் லட்சாதிபதிகளுக்கானவை என்றும் தங்க மட்டுமே சகலருக்குமானது என்றும் மக்களே தங்களுக்குள் தரம் பிரித்துக் கொண்டு விட்டார்கள். அதனால் தான் தங்கத்தின் விலை மட்டும் குறைவேனா என்கிறது. அதனால் தான் தங்கம் வாங்க தக்க தருணம் என்ற ஒன்றை இனம் பிரித்துப் பார்க்கவே முடியாமல் எல்லா நாளுமே திருநாட்களைப் போல தங்க நகைக்கடைகளில் கூட்டம் கும்மி நெரிகிறது. சரி இந்தத் தீபாவளிக்கு நீங்களும் கூட அந்தக் கூட்டத்தில் ஒருவராக இருக்க நேரலாம்... யாருக்குத் தெரியும்?! யார் எப்போது தங்கம் வாங்கப் போகிறார்கள் என?! முன்னைப்போல இல்லை, இப்போது நினைத்துக் கொண்டால் மக்கள் தங்கம் வாங்கக் கிளம்பி விடுகின்றனர்.
காரணம் தங்கம் எப்போதுமே மிகச் சிறந்த முதலீடு என மக்கள் நினைப்பதால்!
சரி... இந்த தீபாவளிக்கு நகை வாங்கப் போகிறீர்களா? ஆமாம் என்றால்... என்ன டிசைனில் வாங்கப் போகிறீர்கள்? அட அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாதா? அடடா என்ன சார் நீங்கள்? அதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா என்ன?
இதோ பார்த்தீர்களா? நகை வடிவமைப்பில் இந்த டிசைனின் பெயர் ஃபிலிகிரீ நகை டிசைன்...
அதாவது குட்டிக் குட்டியாக தங்க உருண்டைகளை, அல்லது தங்கக் கம்பிகளை நெருக்கமாக இணைத்து நமது விருப்பத்துக்குத் தகுந்த மாதிரியான டிசைன்களை உருவாக்குவதை ஃபிலிகிரீ டிசைன் என்கிறார்கள். இம்மாதிரியான நகை டிசைன்களை உருவாக்குவதற்கு மிகுந்த பொறுமையும், கவனமும் தேவை. வரலாற்றில் இம்மாதிரியான டிசைன்களை விரும்புகிறவர்கள் என எகிப்தியர்கள், இத்தாலியர்கள், மற்றும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தியாவிலும் வரலாற்றுக் காலத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் ஃபிலிகிரி வேலைப்பாடுகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.
சாம்பிளுக்குச் சில ஃபிலிகிரீ நகை டிசைன்களைப் பாருங்கள்...
இது ஃபிலிகிரீ நெக்லஸ்...
இது ஃபிலிகிரீ காது தொங்கல் (தொங்கட்டான்)
நகை வாங்கச் செல்பவர்களில் எத்தனை பேருக்குத் தாம் வாங்கப் போகும் நகைகள் இன்னின்ன விதமான டிசைன்களில் எல்லாம் கிடைக்கும் என்ற பொது அறிவு இருக்குமெனத் தெரியவில்லை. இதெல்லாமும் கூட ஒரு விதமான ஆர்வம் தானே?!. இந்த ஆர்வம் இருந்தால் தானே, நாம் வாங்கும் நகைகளுக்காக நாம் செலவிடக்கூடிய தொகை சரியானதா? இல்லையா? என்ற தெளிவு கிடைக்கக் கூடும்.
இந்தியாவில் கிடைக்கக் கூடிய பொதுவான சில ஆபரண டிசைன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்;
No comments:
Post a Comment