Friday, October 20, 2017

ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்'  முதல்வரிடம் குவியும் மனுக்கள்
தமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில், பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், ஊதிய உயர்வு எப்படி கிடைக்குமோ என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.




மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது; அக்., 11ல், அரசாணையும் வெளியிடப்பட்டது.

இன்று விளக்க கூட்டம்

இந்த உயர்வு அறிவிப்பு, அதிருப்தியை ஏற்படுத்துவதாக, ஆசிரியர், அரசு ஊழியர்கள்தெரிவித்துள்ளனர். நிலுவை தொகை கிடையாது என்ற அறிவிப்பாலும், அவர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள், மாநிலம் முழுவதும், கலெக்டர் அலுவலகம் முன், இன்று விளக்க கூட்டம் நடத்துகின்றனர்.

அதன்பின், 'நீதிமன்றத்தை அணுகுவோம்; அதிலும், முடிவு கிடைக்காவிட்டால், போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்' என, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

முதல்வரிடம் மனுக்கள்

அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ -ஜியோ கிராப்' உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில், இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமியிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:

ஆசிரியர், அரசு ஊழியர்களை திருப்திப்படுத்தும் வகையில், ஊதிய உயர்வு வரும் என, எதிர்பார்த்தோம். ஆனால், 21 மாத நிலுவை தொகையை தர, தமிழக அரசு மறுத்து விட்டது.

அதேபோல், ஊதிய முரண்பாடுகள் களையப்படவில்லை. இந்த பிரச்னைகளால், ஊதிய உயர்வில் குழப்பம் அதிகரித்துள்ளது. அவற்றை சரிசெய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY