Monday, October 9, 2017


சேலத்தில் அதிக டெங்கு உயிரிழப்புகள் குறித்து அமைச்சர் விளக்கம்!

October 09, 2017




மிகப்பெரிய மாவட்டம் என்பதனால்தான், முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில், அதிக டெங்கு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில், 296 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் காமராஜ் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

அப்போது, சேலத்தில் டெங்கு உயிரிழப்புகள் அதிகரித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த காமராஜ், சேலம் மிகப்பெரிய மாவட்டம் என்பதுதான், அதிக உயிரிழப்புக்கு காரணம் என விளக்கம் அளித்தார்.

டெங்கு காய்ச்சல் பிரச்னையை மையமாக வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024