தோழியால் 13 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!- குதிரைச் சவாரி பெயரில் மெரினாவில் விபரீதம்
எஸ்.மகேஷ்
சென்னை மெரினா கடற்கரையில் 16 வயதுச் சிறுமியும் 13 வயதுச் சிறுமியும் குதிரை சவாரியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 13 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை முகப்பேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் 16 வயது, 13 வயது சிறுமிகள். இவர்கள் இருவரும் தோழிகள். கடந்த சில தினங்களுக்கு முன், மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். அப்போது குதிரைச் சவாரி செய்துள்ளனர். 13 வயதுச் சிறுமி குதிரை சவாரி செய்தபோது அவரை சில மணி நேரம் காணவில்லை. அதன்பிறகு கடற்கரைக்கு வந்த அந்தச் சிறுமி மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.
இதையடுத்து இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர். 13 வயதுச் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரின் பெற்றோரிடம், உங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளன என்று கூறியுள்ளனர். இதனால் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். 13 வயதுச் சிறுமியிடம் என்ன நடந்தது என்று பெற்றோர் கேட்டபோது அவர் மெரினாவில் குதிரை சவாரியின் போது நடந்த விவரங்களைத் தெரிவித்தார். அதோடு குதிரை சவாரிகாரர், தன்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றதையும் கூறினார்.
இதையடுத்து அரசு மருத்துவமனையிலிருந்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மகளிர் போலீஸார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில் குதிரை சவாரி அண்ணன் தன்னை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த தகவலை வாக்குமூலமாகக் கூறினார். இதனால் திருமங்கலம் போலீஸார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் யார் என்று விசாரித்தனர்.
மெரினா கடற்கரையில் இந்தச் சம்பவம் நடந்ததால் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்திலிருந்து இந்த வழக்கு திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மயிலாப்பூர் உதவி கமிஷனர் உக்கரபாண்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் யாரென்று மெரினாவில் விசாரித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியும், அவருடன் வந்த 16 வயதுச் சிறுமி கொடுத்த தகவல் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்வத்தைப் போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது 13 வயதுச் சிறுமியை அழைத்து வந்த 16 வயதுச் சிறுமிக்கும் குதிரை சவாரி ஓட்டும் செல்வத்துக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்ததும் தெரிந்தது. இதனால்தான் குதிரை சவாரிக்காரரை நம்பி 13 வயதுச் சிறுமி சென்றுள்ளார். மேலும் 13 வயதுச் சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் அவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்றபிறகுதான் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் வெளியில் தெரிந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``13 வயதுச் சிறுமியின் எதிர்காலம் கருதி அவரின் விவரங்களைச் சொல்ல முடியாது. கைது செய்யப்பட்ட குதிரை சவாரி ஓட்டுபவரான செல்வத்தை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியுள்ளோம். தொடர்ந்து அவருடன் வந்த 16 வயதுச் சிறுமியிடமும் விசாரணை நடத்தி தகவல்களைச் சேகரித்துள்ளோம். பாதிக்கப்பட்ட 13 வயதுச் சிறுமிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது" என்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் குதிரை சவாரிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment