Sunday, February 8, 2015

மன்னார்குடியிலிருந்து ஜோக்பூருக்கு பயணிகள் விரைவு ரயில் நாளை முதல் இயக்கம்


திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூர் நகருக்கு வாராந்திர பயணிகள் விரைவு ரயில் சேவை நாளை திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது என தென்னக ரயில்வே சனிóக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய ரயில்வே நிலைக்குழுத் தலைவராக இருந்த திமுக மக்களவை எம்பி டி.ஆர்.பாலு,மன்னார்குடியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூருக்கு பயணிகள் விரைவு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.இதனை தொடர்ந்து,மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மத்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் மன்னார்குடி-ஜோக்பூர் பயணிகள் விரைவு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சி அமைந்த பின் 2014,ஆகஸட் மாதம் தாக்கல் செய்யப்பட்டு புதிய ஆட்சியின் முதல் மத்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் மன்னார்குடி-ஜோக்பூருக்கு பயணிகள் விரைவு ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படும் என உறுதி செய்து.வழி தடங்கள் எவை என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சனிóக்கிழமை திருச்சி கோட்டம்,தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மன்னார்குடி-ஜோக்பூர் பயணிகள் விரைவு ரயில் சேவை தொடங்கவிழா நாளை(பிப்.9-ம் தேதி) திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு மன்னார்குடி ரயில் நிலையத்தில் நடைபெறும் என்றும்.பயணிகள் சிறப்பு ரயில் இயக்கத்தை புதுதில்லியிலிருந்தபடியே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீசுரேஷ் பிரபாகர் பிரபு தொடங்கிவைக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விரைவு பயணிகள் ரயில்(வ.எண்:06864)மன்னார்குடி ரயில் நிலையத்தில் பிப்.9-ம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு புறப்பட்டு,11-ம் தேதி புதன்கிழமை இரவு 11.45க்கு ஜோக்பூர் ரயில் நிலையம் சென்றடைகிறது.

மறு மார்க்த்திலிருந்து வழக்கமான விரைவு பயணிகள் ரயில்(வ.எண்:16863) வருகின்ற பிப்.12-ம் தேதி வியாழக்கிழமை ஜோக்பூரிலிருந்து மதியம் 3-மணிக்கு புறப்பட்டு பிப்.14-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மன்னார்குடி வந்தடையும்.இதே போல் மன்னார்குடியில் திங்கள்கிழமை காலை11.30 -மணிக்கு புறப்படும் வழக்கமான விரைவு பயணிகள் ரயில்(வ.எண்:16864)புதன்கிழமை மாலை 3-மணிக்கு ஜோக்பூர் சென்றடைகிறது.

இந்த ரயில் மன்னார்குடியிலிருந்து புறப்பட்டு நீடாமங்கலம்,மயிலாடுதுறை,சிதம்பரம்,கடலூர்,விழுப்புரம்,செங்கல்பட்டு,தாம்பரம்,சென்னை (எக்மோர்) வழியாக கூடுர்,நெல்லூர்,ஒங்கேல்,விஜயவாடா,வராங்கல்,ராமகுண்டா,பல்கர்ஷா,நாக்பூர்,இட்டாசி,போபால்,உஜ்யின்,கோட்டா,ஜெய்பூர்,மக்கரனை,கோட்டான் சென்று பின்னர் ஜோக்பூர் சென்றடைகிறது.பின்னர் இதே மார்க்கம் வழியாக ஜோக்பூரியிலிருந்து புறப்பட்டு மன்னார்குடி வந்து சேர்கிறது.

இதில் இரண்டு அடுக்கு குளிர்சாத படுக்கை வசதி பெட்டி மற்றும் மூன்றடுக்கு குளிர் சாத படுக்கை வசதி பெட்டிகள் தலா ஒன்றும்.2-ம் வகுப்பு(முன்பதிவு) தூங்கும் வசதி 6-பெட்டி,2-ம் வகுப்பு (பொது)படுக்கை வசதி 6-பெட்டி,முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு பயணிகள் மற்றும் சுமை ஏற்றும் பெட்டி 2 என 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.இந்த ரயிலுக்கான முன் பதிவு இன்று 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024