Thursday, September 24, 2015

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் 2,495 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தற்காலிக தடை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தகவல்



தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தால், 2,495 வழக்கறிஞர்கள் தற் காலிகமாக வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று உத்தர விடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2010-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் இரண்டு ஆண்டு களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் வழக்கறிஞராக தொடர்ந்து பணிபுரிய முடியும். தேர்ச்சி பெறாவிட்டால், வழக் கறிஞருக்கான பதிவு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன.

2010-ம் ஆண்டுமுதல் இது வரை அகில இந்திய பார் கவுன்சில் 8 தகுதித் தேர்வுகளை நடத்தியுள்ளது. பதிவு செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டு களுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறி ஞர் தொழில் செய்வதை தற்காலிக மாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞராக தொழில் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

20-3-2015 அன்று சில வழக்கறி ஞர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கினார்கள். அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கறிஞர்கள் வி.மணிகண்டன், ஆர்.மதன்குமார் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இருவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...