Sunday, October 1, 2017

தேசிய செய்திகள்

குவைத்தில் 15 இந்தியர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு சுஷ்மா சுவராஜ் நன்றி



குவைத்தில் 15 இந்தியர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்து உள்ளார்.

செப்டம்பர் 30, 2017, 06:11 PM
குவைத்,

குவைத் நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக 15 இந்தியர்களுக்கு சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குவைத் நாட்டின் அமீர் ஷேக் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா, 15 இந்தியர்களின் மரண தண்டனையை ரத்து செய்து, அதனை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அங்குள்ள 119 இந்திய கைதிகளின் தண்டனை காலத்தையும் அவர் குறைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குவைத் அமீருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் குவைத் சிறையில் இருந்து விடுதலையாகும் இந்திய கைதிகளுக்கு தாய் நாடு திரும்ப தேவையான வசதிகளை செய்து தருமாறு சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

HH the Emir of Kuwait has been pleased to commute the sentence of 15 Indian nationals from death to life imprisonment. /1— Sushma Swaraj (@SushmaSwaraj) September 30, 2017


HH the Emir has further directed the reduction in sentence of 119 Indian nationals. /2— Sushma Swaraj (@SushmaSwaraj) September 30, 2017


We are grateful to the Emir of Kuwait for this kind gesture./3— Sushma Swaraj (@SushmaSwaraj) September 30, 2017

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...