Sunday, October 1, 2017

சிவகாசியில் பட்டாசு விற்பனை ஜோர் ஆயுத பூஜை விடு முறையையொட்டி குவிந்தனர்
பதிவு செய்த நாள்30செப்
2017
23:03

சிவகாசி, ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சிவகாசிக்கு தீபாவளிக்கு பட்டாசு வாங்க வெளி மாவட்ட மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தீபாவளிக்கு தேவையான பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் ஆண்டு முழுவதும் நடக்கிறது. இங்கு உள்ள 800 ஆலைகளில் உற்பத்தியாகும் பட்டாசுகளை விற்பனை செய்ய சாத்துார், சிவகாசி,
விருதுநகர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரம் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 

ஆண்டுதோறும் டிரேடிங் ஏஜென்டுகள் ஏப்ரலில் வெளி மாநிலங்களுக்கு சென்று ஆர்டர்கள் பெறுகின்றனர். ஆகஸ்ட், செப்டம்பர் வரை வெளி மாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்புகின்றனர். பின்னர் தென் மாநிலங்களுக்கு பட்டாசு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இந்தாண்டு அனைத்தும் நேர் எதிர்மாறாக நடந்தது. ஜனவரி முதல் ஜூலை வரை நடக்கும் வெளி மாநில ஆப்-சீசன் விற்பனை சுத்தமாக இல்லை. வியாபாரிகள் ஆர்டர் கொடுப்பதை தவிர்த்து வந்தனர்.

தற்போது தீபாவளி நெருங்குவதால் வெளி மாநில வியாபாரிகள் நகருக்குள் பட்டாசு வாங்க வந்த வண்ணம் உள்ளனர். பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக சென்று ஆர்டர் கொடுத்து வருகின்றனர். 

ஆனால் உற்பத்தி இறுதிக் காலம் என்பதால், ஆர்டர் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பட்டாசு தேவையும் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க ஆலைகளில் உற்பத்தி தீவிரமாக நடக்கிறது.
பட்டாசு விற்பனை பல்வேறு கோணங்களில் நடப்பதால் கடந்த வாரம் வரை பட்டாசு கடைகளில் கூட்டமே இல்லை. இந்நிலை ஆயுத பூஜை தொடர் விடுமுறை நாட்களில் மாறியுள்ளது. சிறு வியாபாரிகள், சொந்த பயன்பாட்டிற்காக பட்டாசு வாங்க வருவோர் சிவகாசியில் குவிந்து
வருகின்றனர்.

மேலும், பட்டாசு கடைகளில் சில்லரை விற்பனை சூடுபிடித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும் தினமும் வருகின்றனர். 

காலை 9:00 மணிக்கு துவங்கும் வியாபாரம் நள்ளிரவு 12 :00 மணி வரையிலும் நடக்கிறது. இதனால் சில்லரை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.

சரக்குகளை சேர்ப்பதில் தாமதம்

பட்டாசு கடைகளுக்கு தடை, புதிய விதிமுறை போன்ற காரணங்களால் வெளி மாநில வியாபாரம் மந்தமாக இருந்தது. 

இதனால் கடைகளில் சரக்கு தேங்கியது. ஆயுத பூஜை விடுமுறை நாட்களில்தான் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. வெளி மாவட்டங்களில் லைசென்ஸ் வழங்குவதில் தாமதமாகிறது. இதனால் வியாபாரிகள் கொள்முதல் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. சரக்குகள் உரிய நேரத்திற்குள் கொண்டு சேர்க்கமுடியாத நிலை உள்ளது.
பட்டாசு உயர் ரக வெடி பொருள் அல்ல. குறைந்தளவு
அபாயம் உள்ள வெடி பொருள். முறையாக கையாண்டால் விபத்து ஏற்படாது. இதை அறிந்து அரசுத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
கணேசன்,

லட்சுமி ஏஜென்சீஸ் உரிமையாளர், சிவகாசி.

50 சதவீதம் வரை சலுகை

பட்டாசு வாங்க ஆண்டுதோறும் சிவகாசி வருகிறேன். இந்தாண்டு குடும்பத்துடன் வந்திருக்கிறேன். நேரடியாக வருவதால் புது,புது ரகங்களை தேர்வு செய்கிறேன். வெளி மாவட்டங்களை விட இங்கு
50 சதவீதம் வரை சலுகை கிடைக்கிறது. 

புது துணி, சுவீட் என விரும்பியதை வாங்குவதுபோல் குடும்பத்தையே மகிழ்விக்கும் புதிய ரக பட்டாசு வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரூ.15 ஆயிரத்திற்கு பட்டாசுகள் வாங்கி உள்ளேன்.

பரமசிவன்,
மதுரை.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...