Sunday, October 1, 2017

திருச்சி - பாங்காங் விமானம் துவக்கம்

பதிவு செய்த நாள்30செப்
2017
20:00

திருச்சி, திருச்சியில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு, நேரடி முதல் விமானம், 181 பயணியருடன் நேற்று புறப்பட்டுச் சென்றது.
மலேஷியாவின் ஏர் ஏசியா விமான நிறுவனம், தாய்லாந்து நாட்டு விமான நிறுவனத்துடன் இணைந்து, தாய் - ஏர் ஏசியா என்ற புதிய சர்வதேச விமான போக்குவரத்தை துவங்கியுள்ளது.

நேற்று அதிகாலை, 12.05 மணிக்கு, தாய் - ஏர் ஏசியா விமானம், 58 பயணியருடன், திருச்சி வந்தது.திருச்சி விமான நிலையத்தில், தண்ணீர் பீய்ச்சியடித்து, 'வாட்டர் சல்யூட்' அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு புறப்பட்ட விமானத்தில், 181 பயணியர் பாங்காக் புறப்பட்டுச் சென்றனர். இந்த விமானம் தினமும் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...