Saturday, December 1, 2018

திருப்பதி லட்டு இனி அட்டைப்பெட்டியில்

Added : டிச 01, 2018 04:40 |



 
திருப்பதி : திருமலை, திருப்பதி தேவஸ்தானம், லட்டு பிரசாதம் எடுத்துச் செல்ல, பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, அட்டை பெட்டிகளை தயாரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருமலையில், கடந்த மாதம் முதல், பிளாஸ்டிக் கவர்கள், பொருட்கள் பயன்படுத்த, தேவஸ்தானம் தடை விதித்தது. ஆனால், லட்டு பிரசாதம் எடுத்துச் செல்லும் லட்டு கவருக்கு மாற்றுத் தீர்வு காணும் வரை, பிளாஸ்டிக் கவர்களையே பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. தினமும், திருமலையில், ஐந்து லட்சம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்படுகின்றன. அதை எடுத்துச் செல்ல, ஒரு லட்சம் கவர்களை தேவஸ்தானம் விற்று வருகிறது.

தற்போது, லட்டு கவருக்கு மாற்றாக அட்டை பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த அட்டை பெட்டிகள், ஏழுமலையான் உருவப்படங்கள், தேவஸ்தான முத்திரையுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், லட்டு பிரசாதத்தை, 10 நாட்களுக்கு மேலாக வைத்து, தேவஸ்தான தர பரிசோதனை நிலையத்தில் சோதிக்கப் பட்டது. அதில், லட்டு பிரசாதத்தின் தரமும், சுவையும் மாறாததால், அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...