அரசு ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை விவரங்களை பொது தளத்தில் வெளியிடலாமா? நீதிமன்றம் கேள்வி
By DIN |
Published on : 09th January 2017 07:48 PM |
அரசு ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும்
மருத்துவ சிகிச்சை விவரங்களை பொது தளத்தில் வெளியிடலாமா? என்பதை தெரிந்து
கொள்ள விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால், -உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்- என, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பி.ஏ. ஜோசப் என்பவர் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, -தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாகவும், மறைந்த முதல்வர் மரணம் குறித்த உண்மையை வெளிக் கொண்டு வர அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டுமா -என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதேபோன்று, நாகை மாவட்டம் செம்பனார்கோவிலை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஞானசேகரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான மனுக்களில், மூன்று பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டியவுள்ளது.
இரண்டு கட்சிக்காரர்கள் தவிர, சமூக ஆர்வலர் ஒருவரும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பிரச்னை குறித்து வழக்கு தொடருவதற்கு, அவருக்கு தார்மீக உரிமை உள்ளதா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. என்ன சந்தேகம் என்பதை ஆராய வேண்டும்.
மேலும் மருத்துவமனையில் அரசு ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை விவரங்களை பொது தளத்தில் வெளியிடலாமா, உறவினர்கள் கூட மருத்துவ சிகிச்சை விவரங்களை கேட்காதபோது, அவற்றை வெளியிட முடியுமா என்பது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அப்போது மருத்துவமனை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மறைந்த முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த -டிஸ்சார்ஜ் சம்மரி- தயாராக இருப்பதாகவும், தேவையெனில் நீதிமன்றத்தில் மூடி முத்திரையிட்ட உறையில் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக, மனுதாரர் பி.ஏ.ஜோசப் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் கே.எம்.விஜயன், மறைந்த முதல்வருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை மேலும் மறைந்த முதல்வர் மரணம் குறித்து சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, அவரது உடலை பாதுகாக்க கோரிய மனுதாரரான சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனு ஏற்கத்தக்கதல்ல. எனவே, அவற்றை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிய நீதிபதிகள், பிப்ரவரி 23-க்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment